குறள் 158

பொறையுடைமை

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்

mikuthiyaan mikkavai seithaaraith thaandhtham
thakuthiyaan vaenru vidal


Shuddhananda Bharati

Forgiveness

By noble forbearance vanquish
The proud that have caused you anguish.


GU Pope

The Possession of Patience, Forbearance

With overweening pride when men with injuries assail,
By thine own righteous dealing shalt thou mightily prevail.

Let a man by patience overcome those who through pride commit excesses.


Mu. Varadarajan

செருக்கினால்‌ தீங்கானவற்றைச்‌ செய்தவரைத்‌ தாம்‌ தம்முடைய பொறுமைப்‌ பண்பினால்‌ பொறுத்து வென்றுவிட வேண்டும்‌.


Parimelalagar

மிகுதியான் மிக்கவை செய்தாரை-மனச்செருக்கால் தங்கண் தீயவற்றைச் செய்தாரை; தாம் தம் தகுதியான் பொறையான் வென்று விடுக.
விளக்கம்:
(தாமும் அவர்கண் தீயவற்றைச் செய்து தோலாது, பொறையான் அவரின் மேம்பட்டு வெல்க என்பதாம். இவை நான்கு பாட்டானும் பிறர் செய்தன பொறுத்தல் சொல்லப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தமது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத் தாங்கள் தமது பொறையினாலே வென்று விடுக,
(என்றவாறு). இது பொறுத்தானென்பது தோல்வியாகாது ; அது தானே வெற்றியா மென்றது.