குறள் 156

பொறையுடைமை

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்

oruththaarkku orunaalai inpam poruththaarkkup
ponrundh thunaiyum pukal


Shuddhananda Bharati

Forgiveness

Revenge accords but one day's joy
Patience carries its praise for aye.


GU Pope

The Possession of Patience, Forbearance

Who wreak their wrath have pleasure for a day;
Who bear have praise till earth shall pass away.

The pleasure of the resentful continues for a day. The praise of the patient will continue until (the final destruction of) the world.


Mu. Varadarajan

தீங்கு செய்தவரைப்‌ பொறுக்காமல்‌ வருத்தினவர்க்கு ஒருநாள்‌ இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம்‌ அழியும்‌ வரைக்கும்‌ புகழ்‌ உண்டு.


Parimelalagar

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்-தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொருநாளை இன்பமே; பொறுத்தார்க்குப் பொன்னும் துணையும் புகழ்-அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
விளக்கம்:
(ஒருநாளை இன்பம், அந்நாள் ஒன்றினுங் 'கருதியது முடித்தேம்' எனத் தருக்கியிருக்கும் பொய்யின்பம். ஆதாரமாகிய உலகம் பொன்றப் புகழும் பொன்றும் ஆகலின், ஏற்புடைய 'உலகு' என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒறுத்தவர்க்கு அற்றை நாளை யின்பமே உண்டாம்: பொறுத்த வர்க்குத் தாம் சாமளவும் புகழுண்டாம்,
(என்றவாறு). இது புகழுண்டா மென்றது.