Kural 155
குறள் 155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து
oruththaarai onraaka vaiyaarae vaippar
poruththaaraip ponpotr pothindhthu
Shuddhananda Bharati
Vengeance is not in esteem held
Patience is praised as hidden gold.
GU Pope
The Possession of Patience, Forbearance
Who wreak their wrath as worthless are despised;
Who patiently forbear as gold are prized.
(The wise) will not at all esteem the resentful. They will esteem the patient just as the gold which they lay up with care.
Mu. Varadarajan
(தீங்கு செய்தவரைப்) பொறுக்காமல் வருத்தினவரை உலகத்தார் ஒரு பொருளாக மதியார்; ஆனால் பொறுத்தவரைப் பொன்போல் மனத்துள் வைத்து மதிப்பர்.
Parimelalagar
ஒறுத்தாரை, ஒன்றாக வையார்-பிறன் தமக்குத் தீங்கு செய்தவழிப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார்; பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து வைப்பர்-அதனைப் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து கொள்வர்.
விளக்கம்:
(ஒறுத்தவர் தாமும் அத்தீங்கு செய்தவனோடு ஒத்தலின், 'ஒன்றாக வையார்' என்றார். 'பொதிந்து வைத்தல்', சால்புடைமை பற்றி இடைவிடாது நினைத்தல். --
Manakkudavar
(இதன் பொருள்) தமக்குத் துன்பஞ் செய்தாரை மாறாக ஒறுத்தாரை யொரு பொருளாக மதித்து வையார்; பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்து தாற்போலப் போற்றுவார் உலகத்தார், (எ - று )