குறள் 154

பொறையுடைமை

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்

niraiyutaimai neengkaamai vaentin poraiyutaimai
potrri yolukap padum


Shuddhananda Bharati

Forgiveness

Practice of patient quality
Retains intact integrity.


GU Pope

The Possession of Patience, Forbearance

Seek'st thou honour never tarnished to retain;
So must thou patience, guarding evermore, maintain.

If you desire that greatness should never leave, you preserve in your conduct the exercise of patience.


Mu. Varadarajan

நிறை உடையவனாக இருக்கும்‌ தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டினால்‌, பொறுமையைப்‌ போற்றி ஒழுக வேண்டும்‌.


Parimelalagar

நிறை உடைமை நீங்காமை வேண்டின்-ஒருவன் சால்புடைமை தன்கண் நின்று நீங்காமை வேண்டுவானாயின்; பொறை உடைமை போற்றி ஒழுகப்படும்-அவனால் பொறை உடைமை தன்கண் அழியாமல் காத்து ஒழுகப்படும்.
விளக்கம்:
(பொறை உடையானுக்கு அல்லது சால்பு இல்லை என்பதாயிற்று. இவை நான்கு பாட்டானும் பொறை உடைமையது சிறப்புக் கூறப்பட்டது.)


Manakkudavar

(இதன் பொருள்) தனக்கு நிறையுடைமை நீங்காதொழிய வேண்டுவனாயின், பொறையுடைமையைப் பாதுகாத்தொழுக வேண்டும்,
(என்றவாறு). நிறையென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்.