குறள் 153

பொறையுடைமை

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை

inmaiyul inmai virundhthoraal vanmaiyul
vanmai madavaarp porai


Shuddhananda Bharati

Forgiveness

Neglect the guest is dearth of dearth
To bear with fools is strength of strength.


GU Pope

The Possession of Patience, Forbearance

The sorest poverty is bidding guest unfed depart;
The mightiest might to bear with men of foolish heart.

To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.


Mu. Varadarajan

வறுமையுள்‌ வறுமை, விருந்தினரைப்‌ போற்றாமல்‌ நீக்குதல்‌; வல்லமையுள்‌ வல்லமை என்பது அறிவிலார்‌ தீங்கு செய்தலைப்‌ பொறுத்தலாகும்‌.


Parimelalagar

இன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு வறுமையுள் வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-அதுபோல் வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான் மிகை செய்தாரைப் பொறுத்தல்.
விளக்கம்:
(இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே வன்மையாம் என்பது கருத்து.)


Manakkudavar

(இதன் பொருள்) வலியின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக் காமை; வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல்,
(என்றவாறு). புதுமை யென்றது கேட்டறியாதது. நீக்காமை - பொறுமை.