Kural 152
குறள் 152
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று
poruththal irappinai yenrum athanai
maraththal athaninum nanru
Shuddhananda Bharati
Forgive insults is a good habit
Better it is to forget it.
GU Pope
The Possession of Patience, Forbearance
Forgiving trespasses is good always;
Forgetting them hath even higher praise;
Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that.
Mu. Varadarajan
வரம்பு கடந்து பிறர் செய்த தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும். அத்தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்துவிடுதல் பொறுத்தலைவிட நல்லது.
Parimelalagar
என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல் அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின் அப்பொறையினும் நன்று.
விளக்கம்:
('மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும். பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறுத்தலை 'அதனினும் நன்று' என்றார்.)
Manakkudavar
(இதன் பொருள்) பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அப் பொறையினும் நன்று,
(என்றவாறு)