குறள் 151

பொறையுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

akalvaaraith thaangkum nilampolath thammai
ikalvaarp poruththal thalai


Shuddhananda Bharati

Forgiveness

As earth bears up with diggers too
To bear revilers is prime virtue.


GU Pope

The Possession of Patience, Forbearance

As earth bears up the men who delve into her breast,
To bear with scornful men of virtues is the best.

To bear with those who revile us, just as the earth bears up those who dig it, is the first of virtues.


Mu. Varadarajan

தன்னை வெட்டுவோரையும்‌ விழாமல்‌ தாங்குகின்ற நிலம்போல்‌, தம்மை இகழ்வாரையும்‌ பொறுப்பதே தலையான பண்பாகும்‌.


Parimelalagar

அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல - தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கும் நிலம்போல; தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை-தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறம்.
விளக்கம்:
(இகழ்தல்: மிகையாயின செய்தலும் சொல்லுதலும்)


Manakkudavar

பொறையுடைமையாவது தமக்குத் துன்பஞ் செய்தாரைத் தாமுந் துன்பஞ் செய்யாது அவர் மாட்டுச் சென்ற வெகுளியை மீட்டல். (இதன் பொருள்) தன்னை யகழ்வாரைத் தரிக்கின்ற நிலம்போலத் தம்மை யிகழு மவர்களைப் பொறுத்தல் தலைமையாம்,
(என்றவாறு). இது பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமையாகக் கொள்வார் உலகத்தாரென்றது.