குறள் 15

வான் சிறப்பு

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

keduppathooum kettaarkkuch saarvaaimatr raangkae
yeduppathooum yellaam malai


Shuddhananda Bharati

The blessing of Rain

Destruction it may sometimes pour,
But only rain can life restore.


GU Pope

The Excellence of Rain

'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;
As, in the happy days before, it bids the ruined rise.

Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.


Mu. Varadarajan

பெய்யாமல்‌ வாழ்வைக்‌ கெடுக்க வல்லதும்‌ மழை; மழையில்லாமல்‌ வளம்‌ கெட்டு நொந்தவர்க்குத்‌ துணையாய்‌ அவ்வாறே காக்க வல்லதும்‌ மழையாகும்‌.


Parimelalagar

கெடுப்பதூஉம் - பூமியின்கண் வாழ்வாரைப் பெய்யாது நின்று கெடுப்பதூஉம்; கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம்-அவ்வாறு கெட்டார்க்குத் துணையாய்ப் பெய்து முன் கெடுத்தாற்போல எடுப்பதூஉம்; எல்லாம் மழை-இவை எல்லாம் வல்லது மழை.
விளக்கம்:
('மற்று' வினை மாற்றின்கண் வந்தது, 'ஆங்கு என்பது மறுதலைத் தொழிலுவ மத்தின்கண் வந்த உவமச்சொல். கேடும் ஆக்கமும் எய்துதற்கு உரியார் மக்கள் ஆதலின், 'கெட்டார்க்கு' என்றார். 'எல்லாம்' என்றது, அம்மக்கள் முயற்சி வேறுபாடுகளால் கெடுத்தல் எடுத்தல்கள் தாம் பலவாதல் நோக்கி. 'வல்லது' என்பது அவாய் நிலையான் வந்தது. மழையினது ஆற்றல் கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) பெய்யாது நின்று எல்லாப் பொருளையுங் கெடுப்பதும், அவை கெடப் பட்டார்க்குத் துணையாய்த் தான் பெய்து பொருள்களெல்லாவற்றையும் அவ் விடத்தே யுண்டாக்குவதும், மழை,
(என்றவாறு). இஃது இரண்டினையுஞ் செய்ய வற்றென்றவாறு.