குறள் 14

வான் சிறப்பு

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

yaerin ulaaar ulavar puyalyennum
vaari valangkunrik kaal


Shuddhananda Bharati

The blessing of Rain

Unless the fruitful shower descend,
The ploughman's sacred toil must end.


GU Pope

The Excellence of Rain

If clouds their wealth of waters fail on earth to pour,
The ploughers plough with oxen's sturdy team no more.

If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.


Mu. Varadarajan

மழை என்னும்‌ வருவாய்‌ வளம்‌ குன்றிவிட்டால்‌, (உணவுப்‌ பொருள்களை உண்டாக்கும்‌) உழவரும்‌ ஏர்கொண்டு உழ மாட்டார்‌.


Parimelalagar

உழவர் ஏரின் உழார் - உழவர் ஏரான் உழுதலைச் செய்யார்; புயல் என்னும் வாரி வளம் குன்றிக்கால் - மழை என்னும் வருவாய் தன் பயன் குன்றின.
விளக்கம்:
('குன்றியக்கால்' என்பது குறைந்து நின்றது. உணவு இன்மைக்குக் காரணம் கூறியவாறு.) --


Manakkudavar

(இதன் பொருள்) ஏரினுழுதலைத் தவிர்வாருழவர் ; புயலாகிய வாரியினுடைய வளங் குறைந்த காலத்து,
(என்றவாறு) இஃது உழவரில்லை யென்றது.