குறள் 13

வான் சிறப்பு

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி

vininru poippin virineer viyanulakaththu
viyanulakaththu ulninru udatrruchiasi


Shuddhananda Bharati

The blessing of Rain

Let clouds their visits stay, and dearth
Distresses all the sea-girt earth.


GU Pope

The Excellence of Rain

If clouds, that promised rain, deceive, and in the sky remain,
Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain.

If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world.


Mu. Varadarajan

மழை பெய்யாமல்‌ பொய்படுமானால்‌, கடல்‌ சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும்‌ பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்‌.


Parimelalagar

விண் இன்று பொய்ப்பின் மழை வேண்டுங்காலத்துப் பெய்யாது பொய்க்கும் ஆயின்; விரி நீர் வியன் உலகத்துள் கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தின்கண்; நின்று உடற்றும் பசி-நிலை பெற்று உயிர்களை வருத்தும் பசி.
விளக்கம்:
(கடலுடைத்தாயினும் அதனால் பயன் இல்லை யென்பார், 'விரி நீர் வியன் உலகத்து' என்றார். உணவு இன்மையின், பசியான் உயிர்கள் இறக்கும் என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) வானமானது நிலைநிற்கப் பொய்க்குமாயின், விரிந்த நீரினை யுடைய அகன்ற வுலகத்திடத்தே பசியானது நின்று வருத்தாநிற்கும்; எல்லாவுயிர் களையும்,
(என்றவாறு). பொய்த்தல் - தன்றொழில் மறுத்தல். இது 'பசி' என்று பொதுப்படக் கூறிய வதனான் மக்களும் விலங்கும், பொருளுங் காமமுந் துய்க்கலாற்றாது துன்ப முறுமென்று கூறிற்று.