குறள் 12

வான் சிறப்பு

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

thuppaarkkuth thuppaaya thuppaakkith thuppaarkkuth
thuppaaya thooum malai


Shuddhananda Bharati

The blessing of Rain

The rain begets the food we eat
And forms a food and drink concrete.


GU Pope

The Excellence of Rain

The rain makes pleasant food for eaters rise;
As food itself, thirst-quenching draught supplies.

Rain produces good food, and is itself food.


Mu. Varadarajan

உண்பவர்க்குத்‌ தக்க உணவுப்‌ பொருள்களை விளைவித்துத்‌ தருவதோடு, பருகுவார்க்குத்‌ தானும்‌ ஓர்‌ உணவாக இருப்பது மழையாகும்‌.


Parimelalagar

துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கி - உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி; துப்பார்க்குத் துப்பு ஆயதூஉம் மழை-அவற்றை உணர்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பதூஉம் மழை
விளக்கம்:
(தானும் உணவாதலாவது, தண்ணீராய் உண்ணப்படுதல். சிறப்பு உடைய உயர்திணைமேல் வைத்துக் கூறினமையின், அஃறிணைக்கும் இஃது ஒக்கும். இவ்வாறு உயிர்களது பசியையும் நீர்வேட்கையையும் நீக்குதலின், அவை வழங்கி வருதலுடையவாயின என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) பிறிதொன்றுண்பார்க்கு அவருண்டற்கான வுணவுகளையு முண் டாக்கித், தன்னை யுண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே,
(என்றவாறு). இது பசியைக் கெடுக்கு மென்றது.