குறள் 1320

புலவி நுணுக்கம்

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று

ninaiththirundhthu nokkinum kaayum anaiththuneer
yaarulli nokkineer yenru


Shuddhananda Bharati

Feigned anger

I think and gaze at her; she chides:
"On whom your thought just now abides?"


GU Pope

Feigned Anger

I silent sat, but thought the more, And gazed on her. Then she
Cried out, 'While thus you eye me o'er, Tell me whose form you see’.

Even when I look on her contemplating (her beauty), she is displeased and says, "With whose thought have you (thus) looked on my person?"


Mu. Varadarajan

அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும்‌, நீர்‌ யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம்‌ பார்க்கின்றீர்‌? என்று சினம்‌ கொள்வாள்‌.


Parimelalagar

இதுவும் அது. நினைத்து இருந்து நோக்கினும் காயும் - என் சொற்களும் செயல்களும் பற்றித் தான் வெகுடலான், அவற்றையொழிந்திருந்து தன் அவயவங்களது ஒப்பின்மையை நினைந்து அவற்றையே நோக்கினும், என்னை வெகுளாநிற்கும்; அனைத்தும் நீர் நோக்கினீர் யார் உள்ளி என்று - 'நீர் என் அவயவமனைத்தும் நோக்கினீர், அவற்றது ஒப்புமையான் எம் மகளிரை நினைந்து?'' என்று சொல்லி.
விளக்கம்:
('யான் எல்லா அவயங்களானும் ஒருத்தியொடு ஒத்தல் கூடாமையின், ஒன்றால் ஒருவராகப் பலரையும் நினைக்க வேண்டும்; அவரெல்லாரையும் யான் அறியச் சொல்லுமின், 'என்னுங் கருத்தால் 'அனைத்தும் நோக்கினீர் யாருள்ளி?' என்றாள்.'வாளாவிருத்தலும் குற்றமாயிற்று' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தனது உறுப்புக்களோடு வேறொன்றை உவமிக்க ஒண்ணா மையை யெண்ணி நோக்க இருப்பினும், என்னுறுப்பெல்லாம் நீர் காதலித்தவர் களில் யாருறுப்புக்கு ஒக்குமென்று நினைத்திருந்து நோக்கினீரென்று சொல்லி வெகுளும்,(எ-று) இது பார்க்கிலும் குற்றமென்று கரியது.