குறள் 1319

புலவி நுணுக்கம்

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று

thannai unarththinum kaayum pirarkkumneer
indhneerar aakuthir yenru


Shuddhananda Bharati

Feigned anger

I try to coax her and she remarks
"Your coaxing others thus this marks".


GU Pope

Feigned Anger

I then began to soothe and coax, To calm her jealous mind;
'I see’, quoth she, 'to other folks How you are wondrous kind'

Even when I try to remove her dislike, she is displeased and says, "This is the way you behave towards (other women)."


Mu. Varadarajan

ஊடியிருந்போது அவளை ஊடல்‌ உணர்த்தி மகிழ்வித்தாலும்‌, நீர்‌ மற்ற மகளிர்க்கும்‌ இத்தன்மையானவராக ஆவீர்‌ என்று சொல்லிச்‌ சினம்‌ கொள்வாள்‌.


Parimelalagar

இதுவும் அது. தன்னை உணர்த்தினும் காயும் - இவ்வாற்றான் ஊடிய தன்னை யான் பணிந்து உணர்த்துங்காலும் வெகுளா நிற்கும்; பிறர்க்கும் நீர் இந்நீரர் ஆகுதிர் என்று - பிற மகளிர்க்கும் அவர் ஊடியவழி இவ்வாறே பணிந்துணர்த்தும் நீர்மையையுடையீராகுதிர்,' என்று சொல்லி.
விளக்கம்:
('இவள் தௌ¢வித்தவழியும் தௌ¢யாள் என்பதுபற்றி என்மேல் ஏற்றிய தவற்றை உடம்பட்டுப் பணிந்தேன்; பணிய, அதுதானும் புலத்தற்கு ஏதுவாய் முடிந்தது. இனி இவள் மாட்டு செய்யத் தகுவது யாது?' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) தன்னை ஊடல் தீர்த்தற்கு உணர்த்தினும், பிறர்க்கும் நீர் இவ் வாறு செய்வீரே யென்று சொல்லி வெகுளும்,
(என்றவாறு). இது தன்னைப் போற்றினும் குற்றமென்று கூறியது.