Kural 1317
குறள் 1317
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று
valuththinaal thumminaen aaka aliththaluthaal
yaarullith thummineer yenru
Shuddhananda Bharati
I sneezed; she blessed; then changed and wept
"You sneezed now at which lady's thought?"
GU Pope
She hailed me when I sneezed one day; But straight with anger seized,
She cried; "Who was the woman, pray, Thinking of whom you sneezed?'
When I sneezed she blessed me, but at once changed (her mind) and wept, asking, "At the thought of whom did you sneeze?"
Mu. Varadarajan
யான் தும்மினேனாக அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதைவிட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்.
Parimelalagar
இதுவும் அது. தும்மினேனாக வழுத்தினாள் - கூறியிருக்கின்றவள் யான் தும்மினேனாகத் தன் இயற்கை பற்றி வாழ்த்தினாள்; அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்திய தானே மறித்து, 'நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலால் தும்மினீர்?' என்று சொல்லிப் புலந்தழுதாள்.
விளக்கம்:
(வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின், 'அழித்து' என்றான் அன்புடையார் நினைத்தவழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்பது மகளிர் வழக்கு. 'இவ்வழக்கை உள் வழக்காகக் கருதிப் புலந்தாள்' என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) யாம் தும்மினேம்; அதற்காக வாழ்த்தினாள்; நும்மையார் நினைக் கத் தும்மினீர் என்று சொல்லி மீட்டும் அழுதாள்,
(என்றவாறு). இது தும்மினும் குற்றமென்று கூறியது.