குறள் 1316

புலவி நுணுக்கம்

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்

ullinaen yenraenmatr raenmarandhtheer yenraennaip
pullaal pulaththak kanal


Shuddhananda Bharati

Feigned anger

I said "I thought of you". She left
Her embrace crying "Oft you forget".


GU Pope

Feigned Anger

"Each day I called to mind your charms,' 'O, then, you had forgot,'
She cried, and then her opened arms, Forthwith embraced me not.

When I said I had remembered her, she said I had forgotten her and relaxing her embrace, began tofeign dislike.


Mu. Varadarajan

"நினைத்தேன்‌ என்று கூறினேன்‌; “நினைப்புக்கு முன்‌ மறப்பு உண்டு அன்றோ? ஏன்‌ மறந்தீர்‌? என்று என்னைத்‌ தழுவாமல்‌ ஊடினாள்‌.


Parimelalagar

இதுவும் அது. தும்மினேனாக வழுத்தினாள் - கூறியிருக்கின்றவள் யான் தும்மினேனாகத் தன் இயற்கை பற்றி வாழ்த்தினாள்; அழித்து யார் உள்ளித் தும்மினீர் என்று அழுதாள் - அங்ஙனம் வாழ்த்திய தானே மறித்து, 'நும்மை நினைத்து வருந்துகின்ற மகளிருள் யாவர் நினைத்தலால் தும்மினீர்?' என்று சொல்லிப் புலந்தழுதாள்.
விளக்கம்:
(வாழ்த்தலொடு புலத்தல் இயையாமையின், 'அழித்து' என்றான் அன்புடையார் நினைத்தவழி அந்நினைக்கப்பட்டார்க்குத் தும்மல் தோன்றும் என்பது மகளிர் வழக்கு. 'இவ்வழக்கை உள் வழக்காகக் கருதிப் புலந்தாள்' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) அவ்விடத்து எம்மை நினைத்தோமென்றீர்; மறந்தாரன்றே நினைப்பார்; ஆதலான், எங்களை மறந்தீரென்று சொல்லி எம்மை முயங் காளாய்ப் புலவிக்குத் தகுதியாளாயினாள்,
(என்றவாறு). இது நினைத்தோமெனினும் குற்றமென்று கூறியது.