குறள் 1314

புலவி நுணுக்கம்

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று

yaarinum kaathalam yenraenaa ootinaal
yaarinum yaarinum yenru


Shuddhananda Bharati

Feigned anger

"I love you more than all" I said
"Than whom, than whom?" she sulked and chid.


GU Pope

Feigned Anger

'I love you more than all beside,' 'T was thus I gently spoke;
"What all, what all?' she instant cried; And all her anger woke.

When I said I loved her more than any other woman, she said "more than others, yes, more than others," and remained sulky.


Mu. Varadarajan

'யாரையும்விட நாம்‌ மிக்க காதல்‌ கொண்டிருக்கிறோம்‌. என்று சொன்னேனாக, யாரைவிட? யாரைவிட? என்று கேட்டு ஊடல்‌ கொண்டாள்‌.


Parimelalagar

இதுவும் அது. யாரினும் காதலம் என்றேனா - காமம் நுகர்தற்குரிய இருவராயினார் யாவரினும் யாம் மிக்க காதலையுடையேம் என்பது கருதி யாரினும் காதலம் என்றேனாக; யாரினும் யாரினும் என்று ஊடினாள் - நின் தோழி அது கருதாது, என்னாற் காதலிக்கப்பட்ட மகளிர் பலருள்ளும் நின்கண் காதலுடையேன் என்றேனாகக் கருதி, 'அம் மகளிர் யாரினும் என்கண் காதலுடையராயினீர்' என்று சொல்லிப் புலந்தாள்.
விளக்கம்:
(தலைமகள் கருத்திற்குத் தன்மைப் பன்பை உயர்ச்சிக்கண் வந்தது. 'யான் அன்பு மிகுதியாற் சொல்லியதனைக் கருத்து வேறுபடக் கொண்டதல்லது பிறிது காரணமில்லை,' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஒருவனும் ஒருத்தியுமாகி அன்பினால் புணர்ந்தார்யாவரினும் யாம் காதலுடையே மென்று சொன்னேனாக, அதனை அவ்வாறு கொள்ளாது நீர் அன்புபட்டார் பலருள்ளும் யாரினும் யாரினும் அன்புடையீ ரென்று சொல்லி ஊடினாள், (க- று)