Kural 1313
குறள் 1313
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று
koatduppooch kootinum kaayum oruththiyaik
kaattiya kootineer yenru
Shuddhananda Bharati
"For which lady?" she widely cries
While I adorn myself with flowers.
GU Pope
I wreathed with flowers one day my brow, The angry tempest lowers;
She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?'
Even if I were adorned with a garland of branch-flowers, she would say I did so to show it to another woman.
Mu. Varadarajan
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும் 'நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்குக் காட்டுவதற்காகச் சூடினீர்' என்று சினம் கொள்வாள்.
Parimelalagar
தலைமகள் புலவிக் குறிப்பினைக் கண்டு, 'நீவிர் கூடியொழுகா நிற்கவும் இது நிகழ்தற்குக் காரணம் யாது?' என்ற தோழிக்கு தலைமகன் சொல்லியது. கோட்டுப்பூச் சூடினும் - யான் கோடுதலைச் செய்யும் மாலையைச் சூடினேனாயினும்; ஒருத்தியை காட்டிய சூடினீர் என்று காயும் - நும்மாற்காதலிக்கப் பட்டாள் ஒருத்திக்கு இப்பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளாநிற்கும்; இத்தன்மையாட்கு ஒரு காரணம் வேண்டுமோ?
விளக்கம்:
('கோடு' என்பது முதனிலைத் தொழிற்பெயர். பூ - ஆகுபெயர்; வளையமாகச் சூடினும் என்பதாம்; ''கோட்டம் கண்ணியும் கொடுந்திரையாடையும்'' (புறநா. 275) என்றார் பிறரும். இனி, 'அம் மருதநிலத்துப் பூவன்றி வேற்றுநிலத்துக் கோட்டுப்பூவைச் சூடினேனாயினும், ஈண்டையாள், 'பிறளொருத்திக்கு அவ்வேற்றுப் பூவணி காட்டல் வேண்டிச் சூடினீர் என்று வெகுளும்,' எனினும் அமையும்.)
Manakkudavar
(இதன் பொருள்) பக்கப்பூச் சூடினும் ஒருத்திக்குக் காட்டுவதற்காகச் சூடினீரே ன்று சொல்லிக் காயும், (எ - று ) பக்கப்பூ - ஒப்பனைப்பூ. கோட்டுப்பூச் சூடினீர் என்பதற்கு வளைப்பூச்சூடினீ ரெனினுமாம். இது கோலஞ் செய்யினும் குற்றமென்று கூறியது.