குறள் 1312

புலவி நுணுக்கம்

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து

ooti irundhthaemaath thumminaar yaamthammai
needuvaal kenpaak karindhthu


Shuddhananda Bharati

Feigned anger

He sneezed while we went on sulking
Expecting me to say "live long".


GU Pope

Feigned Anger

One day we silent sulked; he sneezed: The reason well I knew;
He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'

When I continued to be sulky he sneezed and thought I would (then) wish him a long life.


Mu. Varadarajan

காதலரோடு ஊடல்‌ கொண்டிருந்தோமாக, யாம்‌ தம்மை நெடுங்காலம்‌ வாழ்க என்று வாய்திறந்து சொல்லுவோம்‌ என நினைத்து அவர்‌ தும்மினார்‌.


Parimelalagar

தலைமகன் நீக்கத்துச் சென்ற தோழிக்குத் தலைமகள் பள்ளியிடத்து நிகழ்ந்தது கூறியது.) ஊடி இருந்தேமாத் தும்மினார் - யாம் தம்மோடு ஊடி உரையாடாதிருந்த காதலர் தும்மினார்; யாம் தம்மை நீடுவாழ்கென்பாக்கு அறிந்து - அது நீங்கித் தம்மை நீடுவாழ்கென்று உரையாடுவேமாகக் கருதி;
விளக்கம்:
(தும்மியக் கால் வாழ்த்துதல் மரபாகலான், உரையாடல் வேண்டிற்று என்பதாம். இயல்பான் நிகழ்ந்த தும்மலைக் குறிப்பான் நிகழ்ந்ததாகக் கோடலின், நுணுக்கமாயிற்று.)


Manakkudavar

(இதன் பொருள்) தம்மோடு புலந்து உரையாடாது இருந்தோமாக; அவ்விடத்து யாம் தம்மை நெடிது வாழுவீரென்று சொல்லுவோமென்பதனை யறிந்துத் தும்மினார். இது தலைமகள் தோழிக்குக் கூறியது.