குறள் 1310

புலவி

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா

oodal unangka viduvaaroadu yennaenjcham
kooduvaem yenpathu avaa


Shuddhananda Bharati

Bouderic

My heart athirst would still unite
With her who me in sulking left!


GU Pope

Pouting

Of her who leaves me thus in variance languishing,
To think within my heart with love is fond desire.

It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her owndislike.


Mu. Varadarajan

ஊடல்‌ கொண்டபோது உணர்த்தி மகிழ்விக்காமல்‌ வாடவிடுகின்றவரோடு என்‌ நெஞ்சம்‌ கூடியிருப்போம்‌ என்று முயல்வதற்குக்‌ காரணம்‌ அதன்‌ ஆசையே.


Parimelalagar

இதுவும் அது. ஊடல் உணங்க - தான் ஊடற்கண்ணே மெலியாநிற்கவும், விடுவாரொடு கூடுவேம் என்பது என் நெஞ்சம் அவா - விட்டிருக்க வல்லாரோடு கூடக்கடவேம் என்று என் நெஞ்சம் முயறற்கு ஏது தன் அவாவே; பிறிது இல்லை.
விளக்கம்:
(அன்பும் அருளும் இல்லாதவரை உடையர் என்றும் அவரோடு யாம் கூடுவம் என்றும் கருதி அதற்கு முயறல் அவாவுற்றார் செயலாகலின், 'கூடுவேம் என்பது அவா' என்றான். காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. 'இக் கூட்டம் முடியாது' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்)என் புலவியைச் சாகவிட்டிருக்க வல்லாரோடு என்னெஞ்சு, கூடு வேமென்று நினைக்கின்றது தன்னாசைப்பாட்டால்,
(என்றவாறு). இது புலவி நீங்க வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் புல்வி தீர்வாளாய்ச் சொல்லியது.