குறள் 1309

புலவி

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது

neerum nilalathu inithae pulaviyum
veelunar kannae inithu


Shuddhananda Bharati

Bouderic

Water delights in a shady grove
And sulking in souls of psychic love.


GU Pope

Pouting

Water is pleasant in the cooling shade;
So coolness for a time with those we love.

Like water in the shade, dislike is delicious only in those who love.


Mu. Varadarajan

நீரும்‌ நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல்‌, ஊடலும்‌ அன்பு செலுத்துவோரிடத்தில்‌ கொள்வதே இன்பமானது.


Parimelalagar

இதுவும் அது. நீரும் நிழலதே இனிது - உயிர்க்கு இன்றியமையாத நீரும் நிழலின் கண்ணதே இனிதாவது; ஏனை வெயிலின் கண்ணது ஆகாது; புலவியும் வீழுநர்கண்ணே இனிது - அதுபோலக் கலவிக்கு இன்றியமையாத புலவியும் அன்புடையார்கண்ணே இனிதாவது, ஏனை அன்பிலார்கண் ஆகாது.
விளக்கம்:
(நிழற்கண் இருந்த நீர் குளிர்ச்சிமிக்குத் தாகம் தணித்தலின், இனிதாயிற்று. வீழுநர் - ஆற்றாமைக்கு நோதலும் கூடுதற்கண் வேட்கையுடையராவார். 'இவள் நம்மாட்டு அவ்விரண்டும் இன்மையின் இப்புலவி தானும் இன்னாதாகா நின்றது,' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) குளிர்ச்சியைத் தனக்கு இயல்பாகவுடைய நீரும் நிழலின் கண்ணதே யாயின், இனிதாம்; அதுபோல, புலவியும் அன்புடையார்மாட்டேயாயின், இனி தாம்,
(என்றவாறு)