Kural 1308
குறள் 1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி
nothal yevanmatrru nondhthaaraenru akhthariyum
kaathalar illaa vali
Shuddhananda Bharati
What's the good of grieving lament
When concious lover is not present?
GU Pope
What good can grieving do, when none who love
Are there to know the grief thy soul endures?
What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?
Mu. Varadarajan
நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?
Parimelalagar
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளோடு புலந்து சொல்லியது. நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லாவழி - இவர் நம்பொருட்டாக நொந்தார் என்று அந்நோவினையறியும் அன்புடையாரைப் பெறாவழி; நோதல் மற்று எவன் - ஒருவர் நோகின்றதனாற் பயன் என்?
விளக்கம்:
('அறிதல்' - ஈண்டு ஊடலை இனிது உணர்தல். 'மற்று' - வினை மாற்றின்கண் வந்தது. 'இவள் நம் காதலியல்லள்; அன்மையின், இந்நோவு அறியாள்; அறியாமையின், நாம் புலக்கின்றதனால் பயனில்லை,' எனத் தன் ஆற்றாமை உணர்த்தியவாறு.)
Manakkudavar
(இதன் பொருள்) யான் நோகின்றதனால் பயனென்னை? இவர் நொந்தாரென்று நினைத்து, அதனை யறிந்து தீர்க்கும் காதலர் மனமிலாராகிய விடத்து,
(என்றவாறு). இஃது உணர்ப்புவயின்வரராவூடற்கண் தலைமகன் புலந்துழி, அதனை யறிந்து அகம்புக்க தோழி அவனுக்குச் சொல்லியது.