Kural 1307
குறள் 1307
ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று
oodalin untaangkoar thunpam punarvathu
needuva thanrukol yenru
Shuddhananda Bharati
"Will union take place soon or late?"
In lover's pout this leaves a doubt.
GU Pope
A lovers' quarrel brings its pain, when mind afraid
Asks doubtful, "Will reunion sweet be long delayed?"
The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike.
Mu. Varadarajan
கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒருவகைத் துன்பம் இருக்கின்றது.
Parimelalagar
இதுவும் அது. புணர்வது நீடுவது
விளக்கம்:
(கொல்) அன்று கொல் என்று- இனிய புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதலான்; ஊடலின் ஓர் துன்பம் உண்டு - இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் நிகழும். ('என்று' என்னும் எச்சத்திற்குக்'கருதலான்' என்பது வருவிக்கப்பட்டது சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது, 'கொல்' என்பதனை 'நீடுவது' என்பதுடனும் கூட்டுக. 'ஆங்கு' என்பது அசைநிலை. ஊடல் - கூடற்கண் விரைவித்தல் கூறியவாறு.)
Manakkudavar
(இதன் பொருள்) ஊடல் செய்யின் இன்பம் உண்டாயினும், அதன்கண்ணும் ஒரு துன்பம் உண்டு; புணருங்கால் அது நீட்டிக்குங்கொல்லோ? நீட்டியாதோ? என்று ஐயுறு தலால்,
(என்றவாறு). இது தலைமகள் ஆற்றாமை வாயிலாகப் புலக்க, தலைமகன் அது கண்டு சொல்லியது.