குறள் 1306

புலவி

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று

thuniyum pulaviyum illaayin kaamam
kaniyum karukkaayum atrru


Shuddhananda Bharati

Bouderic

Love devoid of frowns and pets
Misses its ripe and unripe fruits.


GU Pope

Pouting

Love without hatred is ripened fruit;
Without some lesser strife, fruit immature.

Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.


Mu. Varadarajan

பெரும்பிணக்கும்‌ சிறுபிணக்கும்‌ இல்லாவிட்டால்‌, காமம்‌ மிகப்‌ பழுத்த பழமும்‌ முற்றாத இளங்காயும்‌ போல்‌ பயன்படாததாகும்‌.


Parimelalagar

இதுவும் அது. துனியும் புலவியும் இல்லாயின் - முதிர்ந்த கலாம் ஆகிய துனியும், இளைய கலாம் ஆகிய புலவியும் இல்லையாயின்; காமம் கனியும் கருக்காயும் அற்று - காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும்.
விளக்கம்:
(மிக முதிர்ந்திறும் 'எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்தலின் 'துனியில்லையாயின், கனியற்று' என்றும்; கட்டிளமைத்தாய காய் நுகரும் செவ்வித் தன்றாகலின், 'புலவியில்லையாயின் கருக்காயற்று' என்றும் கூறினான். இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) உணராது நீட்டிக்கின்றதுனியும் உணர மீள்கின்ற புலவியும் இல்லையாயின், காமம் அழுகிய பழம் போலப் புளிக்கும்; காய் போலத் துவர்க்கும் ஆதலால்,
(என்றவாறு). இஃது உணர்தற்கு நல்லது உளதென்று தலைமகள் கூறியது.