குறள் 1305

புலவி

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து

nalaththakai nallavarkku yaeyer pulaththakai
pooanna kannaar akaththu


Shuddhananda Bharati

Bouderic

Pouting of flower-eyed has
To pure good mates a lovely grace.


GU Pope

Pouting

Even to men of good and worthy mind, the petulance
Of wives with flowery eyes lacks not a lovely grace.

An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.


Mu. Varadarajan

நல்ல பண்புகள்‌ அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர்‌ போன்ற கண்களை உடைய மகளிரின்‌ நெஞ்சில்‌ விளையும்‌ ஊடலின்‌ சிறப்பே ஆகும்‌.


Parimelalagar

தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. நலத்தகை நல்லவர்க்கு ஏர் - நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே
விளக்கம்:
(சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. 'தவறில்லார்க்கும் புலவி இனிது' என்பான். 'நலத்தகை நல்லார்க்கும்' என்றான். அழகு - இன்பப் பயனைத் தலைப்படுதல். தான் நுகர்ந்த இன்பத்திற்கு ஏதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு ஓரழகாம்; பூ வன்னகண்ணார்மாட்டுப் புலத்தல்,
(என்றவாறு). நமக்கு ஆகார் மாட்டுப் புலத்தல் தீதென்றவாறு. இது பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது.