குறள் 1304

புலவி

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று

ooti yavarai unaraamai vaatiya
valli muthalarindh thatrru


Shuddhananda Bharati

Bouderic

To comfort not lady in pout
Is to cut the fading plant at root.


GU Pope

Pouting

To use no kind conciliating art when lover grieves,
Is cutting out the root of tender winding plant that droops.

Not to reconcile those who have feigned dislike is like cutting a faded creeper at its root.


Mu. Varadarajan

பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமலிருத்தல்‌, முன்னமே வாடியுள்ள கொடியை அதன்‌ அடியிலே அறுத்தல்‌ போன்றது.


Parimelalagar

இதுவும் அது. ஊடியவரை உணராமை - நும்மோடு ஊடிய பரத்தையரை ஊடலுணர்த்திக் கூடாதொழிதல்; வாடிய வள்ளி முதல் அரிந்தற்று - பண்டே நீர் பெறாது வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும்.
விளக்கம்:
('நீர் பரத்தையரிடத்தல் ஆயவழி எம் புதல்வரைக் கண்டு ஆற்றியிருக்கற் பாலமாய யாம் நும்மோடு ஊடுதற்குரியமல்லம் அன்மையின், எம்மை உணர்த்தல் வேண்டா; உரியராய் ஊடிய பரத்தையரையே உணர்த்தல் வேண்டுவது; அதனால் ஆண்டுச் சென்மின்,' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) நம்மோடு ஊடிக்கண்டும் இவையிற்றால் வரும் பயன் இல்லை; நின்னோடு நெருநல் ஊடிய காமக்கிழத்தியரை ஊடல் தீராது பெயர்தல், வாடிய கொடியை அடியிலே அறுத்தாற்போலும்,
(என்றவாறு). இது காமக்கிழத்தியரை ஊடல் தீராமை தீது; ஆண்டுப்போ மென்று தலை மகள் கூறியது.