குறள் 1302

புலவி

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்

uppamaindh thatrraal pulavi athusirithu
mikkatrraal neela vidal


Shuddhananda Bharati

Bouderic

Sulking is the salt of love; but
Too much of it spoils the taste.


GU Pope

Pouting

A cool reserve is like the salt that seasons well the mess,
Too long maintained, 'tis like the salt's excess.

A little dislike is like salt in proportion; to prolong it a little is like salt a little too much.


Mu. Varadarajan

உப்பு, உணவில்‌ அளவோடு அமைந்திருப்பதைப்‌ போன்றது ஊடல்‌; ஊடலை அளவுகடந்து நீட்டித்தல்‌, அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப்‌ போன்றது.


Parimelalagar

புலவியொழிந்து வாயில் நேரும் வகை அவர் சொல்லியது. புலவி உப்பு அமைந்தற்று - புலவி கலவி இன்பம் செயற்கு வேண்டுமளவிற்றாதல் உப்புத் துய்ப்பனவற்றை இன்சுவையாக்கற்கு வேண்டுமளவிற்றாதல் போலும்; சிறிது நீளவிடல் அது மிக்கற்று - இனி அதனை அவ்வளவில் சிறிது மிகவிடுதல் அவ்வுப்பு அளவின் மிக்காற்போலும்.
விளக்கம்:
(நீள விடல் - அளவறிந்துணராது. கலவிமேல் எழுந்த குறிப்பழுங்குமளவும் செய்தல்; 'சிறிது நீள விடலாகாது' என்றாள். நேர்விக்கின்றாளாகலின், 'உப்பு மிக்க வழித் துய்ப்பது சுவையின்றானாற் போலப் புலவி மிக்கவழிக் கல்வி இன்ப மின்றாம்' என்றமையின், இது பண்பு உவமை.)


Manakkudavar

(இதன் பொருள்) நுகர்வனவற்றிற்கு உப்பமைந்தாற்போல் இனிமை யுண்டாக் கும் புல்வி; அதனை நீளவிடல் அவ்வுப்பு சிறிது மிக்காற்போல் இன்னாதாம். இது வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் மறுத்தவிடத்துப் புலவியை நீளவிடுதல் தகாதென்று அவள் கூறியது.