குறள் 1301

புலவி

புல்லா திராஅப் புலத்தை அவர்உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது

pullaa thiraaap pulaththai avarurum
avarurum allalnoi kaankachiirithu


Shuddhananda Bharati

Bouderic

Feign sulk; embrace him not so that
We can see his distress a bit.


GU Pope

Pouting

Be still reserved, decline his profferred love;
A little while his sore distress we 'Il prove.

Let us witness awhile his keen suffering; just feign dislike and embrace him not.


Mu. Varadarajan

(ஊடும்போது அவர்‌ அடைகின்ற) துன்பநோயைச்‌ சிறிது காண்போம்‌; அதற்காக அவரைத்‌ தழுவாமலிருந்து பிணங்குவாயாக.


Parimelalagar

வாயிலாகச் சென்ற தோழி தலைமகள் வாயில் நேர்தற் பொருட்டு அவளொடு நகையாடிச் சொல்லியது. அவர் உறும் அல்லல் நோய் சிறிது காண்கம் - அங்ஙனம் புலந்தால் காதலரெய்தும் அல்லல் நோயினை யாம் சிறிது காணக் கடவோம்; புல்லாது இராப் புலத்தை - நீ அவரை விரைந்துசென்று புல்லாதே; இத் தொழிலை மேலிட்டுக் கொண்டிருந்து புலப்பாயாக.
விளக்கம்:
(அல்லல் நோய் - துன்பத்தைச் செய்யும் காமநோய். 'சிறிது' என்றாள். புலவியை நீள விடலாகாது என்பது பற்றி. 'புலத்தை' என்புழி? ஐகாரம் ''கடம்பூண்டொருகால் நீ வந்தை'' (கலித். குறிஞ்சி. 27) என்புழிப்போல முன்னிலை வினைவிகுதி. 'புலத்தி' என்பதூஉம் பாடம். புலவிக் குறிப்புக் கண்டு அவள் வழியளாய் நின்று, 'நாம் உற்ற வருத்தம் அவரும் சிறிதுற்று அறிதல் வேண்டும்' என நகையாடி நேர்வித்தவாறு.)


Manakkudavar

புலவியாவது தலைமகனோடு தலைமகள் புலந்து கூறுதல். இது வெளிப் பட்டு நிகழ்தலின், அதன்பின் கூறப்பட்டது. (இதன் பொருள்) நம் காதலர் வந்தால் புல்லாதிருந்து புலத்தல் வேண்டும்; அவ் விடத்து அவருறும் கலக்கத்தை யாம் சிறிது காண்பேமாக,
(என்றவாறு). இது வாயில் வேண்டிச் சென்ற தோழி தலைமகள் புல்விக்குறிப்புக் கண்டு முகங்கொடாமைப் பொருட்டு இனிமை கூறியது.