Kural 1300
குறள் 1300
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி
thanjcham thamarallar yaethilaar thaamutaiya
naenjcham thamaral vali
Shuddhananda Bharati
Why wonder if strangers disown
When one's own heart is not his own?
GU Pope
A trifle is unfriendliness by aliens shown,
When our own heart itself is not our own!
It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger.
Mu. Varadarajan
ஒருவர்க்குத் தாம் உரிமையாகப் பெற்ற நெஞ்சமே உறவாகாதபோது அயலார் உறவில்லாதவராக இருப்பது எளிதேயாகும்.
Parimelalagar
இதுவும் அது. தாம் உடைய நெஞ்சம் தமர் அல்வழி - தாம் உரித்தாக உடைய நெஞ்சம் ஒருவர்க்குத் தமர் அல்லாவழி; ஏதிலார் தமர் அல்லர் தஞ்சம் - அயலார் தமர் அல்லராதல் சொல்ல வேண்டுமோ?
விளக்கம்:
('பிறளொருத்தியைக் காதலி என்று கருதி என் நெஞ்சே என்னை வருத்தாநின்ற பின் அப்பிறள் புலக்கின்றது எளிது,' என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) தம்முடைய நெஞ்சும் தமக்குச் சுற்றமல்ல வாகுங்காலத்து , ஏதி லார் சுற்றமல்லாராவது சொல்லல் வேண்டுமோ?
(என்றவாறு).