Kural 1299
குறள் 1299
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி
thunpaththitrku yaarae thunaiyaavaar thaamutaiya
naenjchandh thunaiyal vali
Shuddhananda Bharati
Who support a man in grief
If lover's heart denies relief?
GU Pope
And who will aid me in my hour of grief,
If my own heart comes not to my relief?
Who would help me out of one's distress, when one's own soul refuses help to one?
Mu. Varadarajan
ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகாவிட்டால், வேறு யார் துணையாவார்?
Parimelalagar
உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. துன்பத்திற்கு - ஒருவர்க்குத் துன்பம் வந்துழி, அது நீக்குதற்கு; தாம் உடைய நெஞ்சம் பணை அல் வழி - தாம் உரித்தாகப் பெற்ற தம்முடைய நெஞ்சம் துணையாகாவழி; துணையாவார் யாரே - வேறு துணையாவார் ஒருவரும் இல்லை
விளக்கம்:
(ஈண்டுத் துன்பமாவது - ஊடலுணர்ப்புவயின் வாராமை. அதற்கு நெஞ்சம் துணையாகாமையாவது, அவளை அன்பிலள் என்றொழியாது கூடற்கண்ணே விதும்பல். 'ஒரு துணையும் இன்மையின், இஃது உற்று விடுதலே உள்ளது,' என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) துன்பமுற்றால் அதற்குத் துணையாவர் உண்டோ ? தம்முடைய நெஞ்சும் தமக்குத் துணையல்லாத காலத்து,
(என்றவாறு). இது தலைமகள் துணையாவார் யாரென்ற தோழிக்குக் கூறியது.