குறள் 1298

நெஞ்சொடுபுலத்தல்

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு

yellin ilivaamyenru yenni avarthiram
ullum uyirkkaathal naenjsu


Shuddhananda Bharati

Chiding the heart

My heart living in love of him
Hails his glory ignoring blame.


GU Pope

Expostulation with Oneself

If I contemn him, then disgrace awaits me evermore;
My soul that seeks to live his virtues numbers o'er.

My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him.


Mu. Varadarajan

உயிரின்மேல்‌ காதல்கொண்ட என்‌ நெஞ்சம்‌, பிரிந்த காதலரை இகழ்ந்தால்‌ இழிவாகும்‌ என்று எண்ணி அவருடைய உயர்ந்த பண்புகளையே நினைக்கின்றது,


Parimelalagar

இதுவும் அது. உயிர்க்காதல் நெஞ்சு - உயிர்மேல் காதலையுடைய என் நெஞ்சு; எள்ளின் இளிவு ஆம் என்று எண்ணி - நம்மை எள்ளிச் சென்றார் என்று நாமும் எள்ளுவேமாயின் பின் நமக்கு இளிவாம் என்று கருதி; அவர் திறம் உள்ளும் - அவர் திறத்தினையே நினையாநின்றது.
விளக்கம்:
(எள்ளுதல் - வாயில் மறுத்தல். இளிவு - வழிபடாடையானும், பிரிவாற்றாமையானும், நாணும் நிறையும் முதலிய இழத்தலானும் உளதாவது. திறம் - வாயில் நேர்தலும் வருதலும் கூடலும் முதலாயின. 'இளிவிற்கு அஞ்சுதலானும் இறந்துபட மாட்டாமையானும் கூடக் கருதாநின்றது' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) அவர் திறத்தைத் தானும் இகழ்ந்தால் அதனானே தனக்கு இளி வரவு உளவாகக் கருதி நினையாநின்றது சாவமாட்டாத நெஞ்சு,
(என்றவாறு). இது தலைமகள் நெஞ்சு அவரைப்போலத் தானும் இகழலாயிருக்க, இகழா நின்றதுமில்லை; அவர் செயலைக் கேளாது சாவவும் வல்லுகின்றதில்லை யென்று அதனோடு புலந்து கூறியது.