குறள் 1280

குறிப்பறிவுறுத்தல்

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு

paenninaal paenmai utaiththaenpa kanninaal
kaamanoi solli iravu


Shuddhananda Bharati

Feeling surmised

To express love-pangs by eyes and pray
Is womanhood's womanly way.


GU Pope

The Reading of the Signs

To show by eye the pain of love, and for relief to pray,
Is womanhood's most womanly device, men say.

To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence.


Mu. Varadarajan

கண்ணினால்‌ காமநோயைத்‌ தெரிவித்துப்‌ பிரியாம லிருக்குமாறு இரத்தல்‌, பெண்தன்மைக்கு மேலும்‌ பெண்‌ தன்மை உடையது என்று கூறுவர்‌.


Parimelalagar

தலைமகன் பிரியாமைக் குறிப்பினைத் தோழிக்கு அறிவுறுத்தது. காமநோய் கண்ணினால் சொல்லி இரவு - மகளிர்தம் காம நோயினைத் தோழியர்க்கும் வாயாற் சொல்லாது கண்ணிற் சொல்லி அது தீர்க்கவேண்டும் என்று அவரை இரவாது உடன்போதல் குறித்துத் தம் அடியினை இரத்தல்; பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப - தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து என்று சொல்லுவர் அறிந்தோர்.
விளக்கம்:
(தலைமகளது உடன் போதல் துணிபு தோழியால் தௌ¢ந்தானாகலின், தன் பிரிவின்மைக் குறிப்பினை அறிவுறுப்பான், அவள் பெண்மையினைப் பிறர்மேலிட்டு வியந்து கூறியவாறு.)


Manakkudavar

(இதன் பொருள்) வாயாற் சொல்லாது கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக்கோடல், தமது இயல்பாகிய பெண்மையோடே பின்னையும் ஒரு பெண்மையுடைத்தென்று சொல்லுவர் அறிவோர்,
(என்றவாறு). இது பிரிவுணர்த்திய தலைமகள் குறிப்புக்கண்டு தலைமகற்குத் தோழி சொல்லியது.