குறள் 1279

குறிப்பறிவுறுத்தல்

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது

thotinokki maentholum nokki atinokki
akhthaan davalsei thathu


Shuddhananda Bharati

Feeling surmised

She views her armlets, her tender arms
And then her feet; these are her norms.


GU Pope

The Reading of the Signs

She viewed her tender arms, she viewed the armlets from them slid;
She viewed her feet: all this the lady did.

She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there(significantly).


Mu. Varadarajan

தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும்‌ நோக்கித்‌ தன்னுடைய அடிகளையும்‌ நோக்கி அவள்‌ செய்த குறிப்பு உடன்போக்காகிய அதுவேயாகும்‌.


Parimelalagar

தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது. யான் அது தௌ¢வித்தவழித் தௌ¢யாது தொடி நோக்கி - 'அவா பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா' எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி' - 'அதற்கு ஏதுவாக இவை மெலியும்' எனத் தன் மென்தோள்களையும்? நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்த காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது. அங்ஙனம் அவள் செய்து குறிப்பு உடன் போக்காயிருந்தது.
விளக்கம்:
(செய்த குறிப்பு - செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், "செறிதொடி செய்திறந்த கள்ளம்" (குறள் 1275 என்றனாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.)


Manakkudavar

(இதன் பொருள்) தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடி யையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு, அதுவாயிருந்தது. அது - உடன்போக்கு.