Kural 1278
குறள் 1278
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து
naerunatrruch senraaryem kaathalar yaamum
yelunaalaem maeni pachandhthu
Shuddhananda Bharati
My lover parted but yesterday;
With sallowness it is seventh day.
GU Pope
My loved one left me, was it yesterday?
Days seven my pallid body wastes away!
It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow.
Mu. Varadarajan
எம்முடைய காதலர் நேற்றுத்தான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
Parimelalagar
இதுவும் அது. எம் காதலர் சென்றார் நெருநற்று - எம் காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனிபசந்து எழுநாளேம் - அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம்.
விளக்கம்:
('நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழு நாளுண்டாகலின், அன்றே மேனி பசந்தது என்பாள், 'மேனி பசந்து எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.)
Manakkudavar
(இதன் பொருள்) எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார்; யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம்,
(என்றவாறு). இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி, இன்புற்றில் மென்று தலைமகள் கூறியது.