குறள் 1277

குறிப்பறிவுறுத்தல்

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை

thannandh thuraivan thanandhthamai namminum
munnam unarndhtha valai


Shuddhananda Bharati

Feeling surmised

Quick, my bracelets read before
The mind of my lord of cool shore.


GU Pope

The Reading of the Signs

My severance from the lord of this cool shore,
My very armlets told me long before.

My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore.


Mu. Varadarajan

குளிர்ந்த துறையை உடைய காதலன்‌ பிரிந்த பிரிவை நம்மைவிட முன்னமே நம்முடைய வளையல்கள்‌ உணர்ந்து கழன்று விட்டனவே!


Parimelalagar

இதுவும் அது. தண்ணந்துறைவன் தணந்தமை - குளிர்ந்த துறையை உடையவன் நம்மை மெய்யாற் கூடியிருந்தே மனத்தாற்பிரிந்தமையை; நம்மினும் வளைமுன்னம் உணர்ந்த - அவன் குறிப்பான் அறிதற்குரிய நம்மினும் இவ்வளகைள் முன்னே அறிந்தன.
விளக்கம்:
(கருத்து நிகழ்ந்ததாகலின், 'தணந்தமை' என்றும், 'யான் தௌ¢ய உணர்தற்கு முன்னே தோள்கள் மெலிந்தன' என்பாள், அதனை வளைமேலேற்றி, அது தன்னை உணர்வு உடைத்தாக்கியும் கூறினாள்.)


Manakkudavar

(இதன் பொருள்) குளிர்ந்த துறையையுடையவன் நம்மை நீங்கினமையை, நாமறி வதற்கும் முன்னே வளைகள் அறிந்தன,
(என்றவாறு).