குறள் 1276

குறிப்பறிவுறுத்தல்

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து

paerithaatrrip paetpak kalaththal arithaatrri
anpinmai koolva thutaiththu


Shuddhananda Bharati

Feeling surmised

His over-kind close embrace sooths;
But makes me feel, loveless, he parts.


GU Pope

The Reading of the Signs

While lovingly embracing me, his heart is only grieved:
It makes me think that I again shall live of love bereaved.

The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.


Mu. Varadarajan

பெரிதும்‌ அன்பு செய்து விரும்புமாறு கூடுதல்‌, அரிதாகிய பிரிவைச்‌ செய்து பிறகு அன்பில்லாமல்‌ கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்‌.


Parimelalagar

தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தௌ¢விக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது. பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து.
விளக்கம்:
(பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) ஊடினகாலத்து அதன் அளவன்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்பு போலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல், யான் அரிதாக ஆற்றி யிருந்து தம்மன்பின்மையை யெண்ணுவதொரு புரிவுடைத்து,
(என்றவாறு). இது பிரியலுற்ற தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லி யது.