குறள் 1275

குறிப்பறிவுறுத்தல்

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து

serithoti seithirandhtha kallam uruthuyar
theerkkum marundhthonru utaiththu


Shuddhananda Bharati

Feeling surmised

The close-bangled belle's hidden thought
Has a cure for my troubled heart.


GU Pope

The Reading of the Signs

The secret wiles of her with thronging armlets decked,
Are medicines by which my raising grief is checked.

The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow.


Mu. Varadarajan

காதலி என்னை நோக்கிச்‌ செய்துவிட்டுச்‌ சென்ற கள்ளமான குறிப்பு. என்‌ மிக்க துயரத்தைத்‌ தீர்க்கும்‌ மருந்து ஒன்று உடையதாக இருக்கின்றது.


Parimelalagar

இதுவும் அது. செறி தொடி செய்து இறந்த கள்ளம் - நெருங்கிய வளைகளையுடையாள் என்கண் இல்லாத தொன்றனை உட்கொண்டு அது காரணமாக என்னை மறைத்துப் போன குறிப்பு; உறுதுயர் தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து . என் மிக்க துயரைத் தீர்க்கும். மருந்தாவதொன்றனை உடைத்து.
விளக்கம்:
(உட்கொண்டது - பிரிவு. கள்ளம் - ஆகுபெயர். மறைத்தற் குறிப்புத் தானும் உடன்போக்கு உட்கொண்டது. உறுதுயர் - நன்று செய்யத் தீங்கு விளைதலானும் அதுதான் தீர்திறம் பெறாமையானும் உளதாயது. மருந்து: அப்பிரிவின்மை தோழியால் தௌ¢வித்தல். 'நீ அது செய்தல் வேண்டும்,' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) செறிந்தவளையினை யுடையாள் செய்து அகன்றகளவு, நீ யுற்ற தொரு துன்பத்தைத் தீர்ப்பதொருமருந்தாதலை உடைத்து,
(என்றவாறு). தோழி மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தவழி, கேளாரைப்போலத் தலைமகள் அகன்ற செவ்வியும் எதிர்ப்பட்ட தலைமகற்கு நின்குறை முடியும்; நீ இவ்விடைச் செல்லென்று தோழி கூறியது.