குறள் 1274

குறிப்பறிவுறுத்தல்

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு

mukaimokkul ullathu naatrrampol paethai
nakaimokkul ullathon rundu


Shuddhananda Bharati

Feeling surmised

Like scent in bud secrets conceal
In the bosom of her half smile.


GU Pope

The Reading of the Signs

As fragrance in the opening bud, some secret lies
Concealed in budding smile of this dear damsel's eyes.

There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in anunblossomed bud.


Mu. Varadarajan

அரும்பு தோன்றும்போதும்‌ அடங்கியிருக்கும்‌ மணத்தைப்‌ போல்‌, காதலியின்‌ புன்முறுவலின்‌ தோற்றத்தில்‌ அடங்கி இருக்கும்‌ குறிப்பு ஒன்று உள்ளது.


Parimelalagar

இதுவும் அது. முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல் - முகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாத நாற்றம் போல; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு - நின் பேதை என்னோடு நகக் கருதும் நகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்பு உண்டு.
விளக்கம்:
(முகிழ்ப்பு - முதிர்ச்சியாற் புடைபடுதல். நகை - புணர்ச்சி இன்பத்தான் நிகழ்வது.)


Manakkudavar

(இதன் பொருள்) மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம் போல், பேதை யுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோ ரின்பம் உண்டு,
(என்றவாறு). இஃது இறந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகை செய்து சேட்படுத்திய போது இவள் குறிப்பு நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன் னெஞ்சிற்குச் சொல்லியது.