குறள் 1273

குறிப்பறிவுறுத்தல்

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு

maniyil thikaltharu noolpol madandhthai
aniyil thikalvathonru undu


Shuddhananda Bharati

Feeling surmised

Something shines through her jewelled charm
Like thread shining through wreathed gem.


GU Pope

The Reading of the Signs

As through the crystal beads is seen the thread on which they 're strung
So in her beauty gleams some thought cannot find a tongue.

There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems.


Mu. Varadarajan

(கோத்த) மணியினுள்‌ விளங்கும்‌ நூலைப்போல்‌ என்‌ காதலியின்‌ அழகினுள்‌ விளங்குவதான குறிப்பு ஒன்று இருக்கின்றது.


Parimelalagar

இதுவும் அது. மணியில் திகழ்தரும் நூல்போல். கோக்கப்பட்ட பளிங்கு மணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாம் நூல் போல; மடந்தை அணியில் திகழ்வது ஒன்று உண்டு - இம்மடந்தையது அணியகத்துக் கிடந்து புறத்துப் புலனாகின்றதொரு குறிப்பு உண்டு.
விளக்கம்:
(அணி - புணர்ச்சியான் ஆய அழகு. அதனகத்துக் கிடத்தலாவது, அதனோடு உடன் நிகழ்தற்பாலதன்றி வைத்து உடனிகழ்தல். 'அதனை யான் அறிகின்றிலேன், நீ அறிந்து கூறல் வேண்டும்,' என்பது கருத்து.)


Manakkudavar

(இதன் பொருள்) கோவைப்பட்ட நீலமணியின் கண்ணே தோற்றுகின்ற நூல் போல், இம்மடந்தை அழகினுள்ளே இவள் மறைக்கவும் தோற்றுகின்றதொரு துன்பம் உண்டு, (எ - று ). அழகு - புணர்ச்சியால் வந்த அழகு போலுமென்னும் குறிப்பு.