குறள் 1272

குறிப்பறிவுறுத்தல்

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது

kanniraindhtha kaarikaik kaampaerthot paethaikkup
paenniraindhtha neermai paerithu


Shuddhananda Bharati

Feeling surmised

With seemly grace and stem-like arms
The simple she has ample charms.


GU Pope

The Reading of the Signs

The simple one whose beauty fills mine eye, whose shoulders curve
Like bambu stem, hath all a woman's modest sweet reserve.

Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo.


Mu. Varadarajan

கண்நிறைந்த அழகும்‌ மூங்கில்போன்ற தோளும்‌ உடைய என்‌ காதலிக்குப்‌ பெண்மைத்தன்மை நிறைந்து விளங்கும்‌ இயல்பு மிகுதியாக உள்ளது.


Parimelalagar

நாணால் அவள் அது சொல்லாளாயவழி அவன் தோழிக்குச் சொல்லியது. கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு. என் கண்ணிறைந்த அழகினையும் வேயையொத்த தோளினையும் உடைய நின் பேதைக்கு; பெண் நிறைந்த நீர்மை பெரிது - பெண்பாலரிடத்து நிறைந்த மடமை அவ்வளவன்றி மிகுந்தது.
விளக்கம்:
(இலதாய பிரிவினைத் தன்கண் ஏற்றி அதற்கு அஞ்சுதலான், இவ்வாறு கூறினான்.)


Manakkudavar

(இதன் பொருள்) காண்பார் கண்ணிறைந்த அழகினையும் காம்பையொத்த தோளி னையும் உடைய பேதைக்குப் பெண்மை நிறைந்த நீர்மை பெரிது,
(என்றவாறு).