Kural 1269
குறள் 1269
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு
orunaal yelunaalpol sellumsaen senraar
varunaalvaiththu yaengku pavarkku
Shuddhananda Bharati
One day seems as seven to those
Who yearn return of distant spouse.
GU Pope
One day will seem like seven to those who watch and yearn
For that glad day when wanderers from afar return.
To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days.
Mu. Varadarajan
தொலைவில் உள்ள வெளிநாட்டிற்குச் சென்ற காதலர் திரும்பிவரும் நாளை நினைத்து ஏங்கும் மகளிர்க்கு ஒருநாள் ஏழுநாள் போல(நெடிதாகக்) கழியும்.
Parimelalagar
பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் 'இது ஒன்று உடைத்து!' என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது. கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாயாயினும்; எல்லா கை இகழ்ந்து - அதற்கு உடம்படாதே நின்னைக் கைகடந்து; நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு - நின் உண்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியமுண்டாய் இரா நின்றது; இனி அதனை நீயே தெளியச் சொல்வாயாக.
விளக்கம்:
(காத்தல் - நாணால் அடக்குதல். தன்கண் பிரிதற்குறிப்புளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு.)
Manakkudavar
(இதன் பொருள்) நெடு நெறிக்கட்சென்றார் வருநாளைக்குறித்து இரங்குமவர்களுக்கு ஒருநாளைப்பொழுது தானே எழுநாளைப்போலச் செல்கின்றது,
(என்றவாறு). 5