Kural 1268
குறள் 1268
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து
vinaikalandhthu vaenreeka vaendhthan manaikalandhthu
maalai ayarkam virundhthu
Shuddhananda Bharati
May the king fight and win and give
And with my wife I will feast this eve!
GU Pope
O would my king would fight, o'ercome, devide the spoil;
At home, to-night, the banquet spread should crown the toil.
Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening.
Mu. Varadarajan
அரசன் இச் செயலில் முனைந்து நின்று வெற்றி பெறுவானாக; அதன்பின் யாம் மனைவியோடு கூடியிருந்து அன்றுவரும் மாலைப்பொழுதிற்கு விருந்து செய்வோம்.
Parimelalagar
வேந்தற்கு உற்றுழிப் பிரிந்த தலைமகன் வினை முடிவு நீட்டித் துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது. வேந்தன் வினை கலந்து வென்று ஈக - வேந்தன் வினை செய்தலைப் புரிந்து வெல்வானாக; மனை கலந்து மாலை விருந்து அயர்கம் - யாமும் மனைவியைச் சென்று கூடி ஆண்டை மாலைப்பொழுதிற்கு விருந்து அயர்வேமாக.
விளக்கம்:
('மனை' என்பது ஈண்டு ஆகுபெயர். "மங்கலம் என்ப மனை மாட்சி" (குறள் 60) என்புழிப்போல. வினைசெய்தற்கண் வந்த மாலைப் பொழுதிற்கு எதிர்கோடல் அலங்கரித்தல் முதலிய இன்மையின், 'மனை கலந்து மாலைக்கு விருந்தயர்கம்' என்றான். நான்கன் உருபு விகாரத்தால் தொக்கது. இது வினை முடியாமுன் கூறலான், விதுப்பாயிற்று. பிறரெல்லாம் இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைத்தார். தலைமகனைக் கூறாது வேந்தன் வெல்க என்றும், மனை கலந்து என்றும், மாலைப் பொழுதின்கண் விருந்தயர்க என்றும் வந்த, அவ்வுரைதானே அது கூடாமைக்குக் கரியாயிற்று.)
Manakkudavar
(இதன் பொருள்) தம் வேந்தன் போரின்கண்ணே பொருந்தி வெல்வானாக; யாமும் மனையிலே பொருந்தி இம்மாலைப்பொழுதிலே நம் காதலர்க்கு விருந்து செய்வே மாக,
(என்றவாறு). வருதற்கு இடையீடு அவன் வினை முடியாமையென்று நினைத்து அவனை வெல்க என்றாள். மனை - அட்டில்.