குறள் 1266

அவர்வயின்விதும்பல்

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட

varukaman konkan orunaal parukuvan
paithalnoi yellaam keda


Shuddhananda Bharati

Mutual yearning

Let my spouse return just a day
Joy-drink shall drive my pain away.


GU Pope

Mutual Desire

O let my spouse but come again to me one day!
I'll drink that nectar: wasting grief shall flee away.

May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow.


Mu. Varadarajan

என்‌ காதலன்‌ ஒருநாள்‌ என்னிடம்‌ வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய்‌ எல்லாம்‌ தீருமாறு நான்‌ நன்றாக நுகர்வேன்‌.


Parimelalagar

இதுவும் அது. கொண்கண் ஒருநாள் வருக - இத்துணைநாளும் வாராக் கொண்கன் ஒருநாள் என்கண் வருவானாக; பைதல் நோயெல்லாம் கெடப் பருகுவன் - வந்தால் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் கெட அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன்.
விளக்கம்:
('வருக' என்பதற்கும் 'மன்' என்பதற்கும் மேல் உரைத்தவாறே கொள்க. அக்குறிப்பு 'அவ்வொரு நாளைக்குள்ளே இனி வரக்கடவ நோய்களும் கெடுப்பல்' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்; வந்தானாகில், என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன்,
(என்றவாறு). இது வரவு வேட்கையாற் கூறியது.