குறள் 1265

அவர்வயின்விதும்பல்

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு

kaankaman konkanaik kannaarak kandapin
neengkumyen maenthol pachappu


Shuddhananda Bharati

Mutual yearning

Let me but gaze and gaze my spouse
sallow on my soft shoulders flies.


GU Pope

Mutual Desire

O let me see my spouse again and sate these longing eyes!
That instant from my wasted frame all pallor flies.

May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders.


Mu. Varadarajan

என்‌ காதலனைக்‌ கண்ணாரக்‌ காண்பேனாக; கண்டபிறகு, என்னுடைய மெல்லிய தோளில்‌ உண்டாகிய பசலைநிறம்‌ தானே நீங்கி விடும்‌.


Parimelalagar

தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை,' என்ற தோழிக்குச் சொல்லியது. கண் ஆரக் கொண்கனைக் காண்க - என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின் கண்பசப்புத் தானே நீங்கும்.
விளக்கம்:
('காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அது வேண்டும் எனப்துபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) என் கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக; அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளினுண்டான பசலை நீங்கும்,
(என்றவாறு). இது காண்டல் வேட்கையால் கூறியது.