குறள் 1261

அவர்வயின்விதும்பல்

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்

vaalatrrup putrkenra kannum avarsenra
naalotrrith thaeindhtha viral


GU Pope

Mutual Desire

My eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn,
With nothing on the wall the days since I was left forlorn.

My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail.


Mu. Varadarajan

என்‌ கண்களும்‌ அவர்‌ வரும்‌ வழியைப்‌ பார்த்துப்‌ பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும்‌ அவர்‌ சென்ற நாட்களைக்‌ குறித்துத்‌ தொட்டுத்‌ தொட்டுத்‌ தேய்ந்தன.


Parimelalagar

போய நாள்கள் சுவரின்கண் இழைத்தவற்றைத் தொட்டு எண்ணுதலான் என் விரல்கள் தேய்ந்தன; கண்ணும் வாள் அற்றுப் புற்கென்ற - அதுவேயன்றி அவர் வரும் வழிபார்த்து என் கண்களும் ஔ¢யிழந்து புல்லியவாயின: இவ்வாறாயும் அவர் வரவு உண்டாயிற்றில்லை.
விளக்கம்:
(நாள்-ஆகு பெயர். ‘புல்லியவாதல்’ நுண்ணிய காணமாட்டாமை. ‘ஒற்ற’ என்பது ‘ஒற்றி’ எனத் திரிந்து நின்றது. ‘இனி யான் காணுமாறு என்னை?’ என்பதாம். நாள் எண்ணலும் வழி பார்த்தலும் ஒருகாற் செய்தொழியாது இடையின்றிச் செய்தலான், விதுப்பாயிற்று.)


Manakkudavar

அவர்வயின்விதும்பலாவது அவர் வரவின்கண்ணே விரைதல்; காதலர் வரவு கேட்டிருத்தலென்றவாறு. இவையெல்லாம் தோழிக்குக் கூறினவாகக் கொள்ளப்படும். நிறையழிந்தார் அப்பொழுது காதலர் வரவிற்கு ஆசையுற்றிருப் பாராதலான், அதன்பின் இது கூறப்பட்டது. (இதன் பொருள்) கண்களும் அவர் வரவைப்பார்த்து நோதலால் ஒளியிழந்து புல் லென்றன ; விரல்களும் அவர்போன நாட்களை யெண்ணி முடக்கு தலாய்த் தேய்ந்த ன,
(என்றவாறு) இது வரவு காணாமையால் தலைமகள் கூறியது