Kural 1259
குறள் 1259
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு
pulappal yenachsenraen pullinaen naenjcham
kalaththal uruvathu kandu
Shuddhananda Bharati
In huff I went and felt at ease
Heat to heart in sweet embrace.
GU Pope
'I 'll shun his greeting’; saying thus with pride away I went:
I held him in my arms, for straight I felt my heart relent.
I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mindbegan to unite with him!
Mu. Varadarajan
ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னைவிட்டு அவரோடு கூடுவதைக் கண்டு தழுவினேன்.
Parimelalagar
இதுவும் அது புலப்பல் எனச் சென்றேன் - அவர் வந்த பொழுது புலக்கக் கடவேன் என்று கருதி, முன் நில்லாது பிறிதோரிடத்துப் போயினேன்; நெஞ்சம் கலத்தலுறுவது கண்டு புல்லினேன் - போயும், என் நெஞ்சம் நிறையின் நில்லாது அறைபோய் அவரோடு கலத்தல் தொடங்குதலை அறிந்து, 'இனி அது வாயாது' என்று புல்லினேன்.
விளக்கம்:
(வாயாமை புலத்தற்கருவியாய நெஞ்சு தானே கலத்தற்கருவியாய் நிற்றலின் அது முடியாமை.)
Manakkudavar
(இதன் பொருள்) புலப்பலெனச் சென்ற யான் முயங்கினேன், நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு,
(என்றவாறு). இஃது ஊடுதல் தீமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என் மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது.