குறள் 1258

நிறையழிதல்

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை

panmaayak kalvan panimoli annonam
paenmai utaikkum patai


Shuddhananda Bharati

Reserve lost

The cheater of many wily arts
His tempting words break through women's hearts.


GU Pope

Reserve Overcome

The words of that deceiver, versed in every wily art,
Are instruments that break through every guard of woman's heart!

Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?


Mu. Varadarajan

நம்முடைய பெண்மையாகிய அரணை அழிக்கும்‌ படையாக இருப்பது. பலமாயங்களில்‌ வல்ல கள்வனான காதலருடைய பணிவுடைய மொழி அன்றோ?


Parimelalagar

இதுவும் அது. நம் பெண்மை உடைக்கும் படை - நம் நிறையாகிய அரணை அழிக்கும் தானை; பல் மாயக் கள்வன் பணி மொழியன்றோ - பல பொய்களை வல்ல கள்வனுடைய தாழ்ந்த சொற்களன்றோ? ஆனபின் அது நிற்குமாறென்னை?
விளக்கம்:
(பெண்மை ஈண்டுத் தலைமைபற்றி நிறைமேல் நின்றது. 'வந்தாற் புலக்கக் கடவேம்' என்றும், 'புலந்தால் அவன் சொற்களானும் செயல்களானும் நீங்கேம்' என்றும், இவை முதலாக எண்ணிக் கொண்டிருந்தன யாவும் காணாது கலவிக் கண் தன்னினும் முற்படும் வகை வந்து தோன்றினான் என்பாள், 'பல் மாயக் கள்வன்' என்றாள். பணிமொழி தம்மினும் தான் அன்பு மிகுதியுடையனாகச் சொல்லுஞ் சொற்கள். 'அவன் அத்தன்மையனாக, சொற்கள் அவையாக, நம் நிறையழியாது ஒழியுமோ?' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) பல பொய்களையும் பேசவல்ல கள்வனது தாழ்ந்த மொழியல்லவோ? நமது பெண்மையை அழிக்குங் கருவி,
(என்றவாறு). இது பெண்மையல்ல என்ற தோழிக்கு அவன் என்னோடு கலந்த நாளில் சொன்ன சொற்கள் காண் பெண்மையைக் கெடுக்கின்றது; அல்லது கெடா தென்று தலைமகள் கூறியது.