Kural 1256
குறள் 1256
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர்
setrravar pinsaeral vaenti aliththaroa
yetrraennai utrra thuyar
Shuddhananda Bharati
O Grief, my deserter you seek
Of your caprice what shall I speak!
GU Pope
My grief how full of grace, I pray you see!
It seeks to follow him that hateth me.
The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?
Mu. Varadarajan
வெறுத்து நீங்கிய காதலரின்பின் செல்ல விரும்பிய நிலையில் இருப்பதால் என்னை அடைந்த இந்தக்காமநோய் எத்தன்மையானது? அந்தோ?
Parimelalagar
'நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம்,' என்றாட்குச் சொல்லியது. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை. தம்மை அகன்று சென்றார்பின் செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை; காமநோய் உற்றார் அறிவது ஒன்று அன்று - காம நோயினை உறாதார் அறிவதொன்று அன்றி, உற்றார் அறிவதொன்று அன்று.
விளக்கம்:
(இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள். பின் சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர். காமநோய் உறாதார் . மானம் உடையார். 'நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று அன்று,' என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) செறுத்தார் பின்னே யான் சேறலை வேண்டுதலால், என்னை யடைந்ததுயர் எத்தன்மைத்து ; நன்றாக இருக்கின்றது,
(என்றவாறு) இது தனித்திருந்து துயருறுதல் காமத்திற்கு இயற்கையென்று கூறிய தலை மகளை நோக்கி, இது நின்போல்வார்க்குத் தகாதென்ற தோழிக்கு அவள் சொல் லியது.