Kural 1255
குறள் 1255
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று
setrraarpin sellaap paerundhthakaimai kaamanoi
utrraar arivathonru anru
Shuddhananda Bharati
Dignity seeks not a deserter
But Love-sick is its innovator.
GU Pope
The dignity that seeks not him who acts as foe,
Is the one thing that loving heart can never know.
The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love.
Mu. Varadarajan
தம்மை வெறுத்து நீங்கியவரின்பின் செல்லாமல் மானத்தோடு நிற்கும் பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் தன்மையது அன்று.
Parimelalagar
'நம்மை மறந்தாரை நாமும் மறக்கற்பாலம்,' என்றாட்குச் சொல்லியது. செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை. தம்மை அகன்று சென்றார்பின் செல்லாது தாமும் அகன்று நிற்கும் நிறையுடைமை; காமநோய் உற்றார் அறிவது ஒன்று அன்று - காம நோயினை உறாதார் அறிவதொன்று அன்றி, உற்றார் அறிவதொன்று அன்று.
விளக்கம்:
(இன்பத்தோடு கழியுங் காலத்தைத் துன்பத்தொடு கழியுமாறு செய்தலின் 'செற்றார்' என்றாள். பின் சேறல் - மனத்தால் இடைவிடாது நினைத்தல். பெருந்தகைமை - ஈண்டு ஆகுபெயர். காமநோய் உறாதார் . மானம் உடையார். 'நன்று என உணரார் மாட்டும் சென்றே நிற்கும், யான் அறிவதொன்று அன்று,' என்பதாம்.)
Manakkudavar
(இதன் பொருள்) தம்மை யிகழ்ந்தார் பின் செல்லாத பெரிய தகைமை, காம நோயுற்றாரால் அறிவதொன்று அன்று,
(என்றவாறு). இது தம்மை யிகழ்ந்து போனவர் பின் சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.