குறள் 1254

நிறையழிதல்

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்

niraiyutaiyaen yenpaenman yaanoyen kaamam
maraiyirandhthu manru padum


Shuddhananda Bharati

Reserve lost

I was proud of my sex-reserve
Lo lust betrays what I preserve.


GU Pope

Reserve Overcome

In womanly reserve I deemed myself beyond assail;
But love will come abroad, and casts away the veil.

I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public.


Mu. Varadarajan

யான்‌ இதுவரையில்‌ நிறையோடிருப்பதாக எண்ணிக்‌ கொண்டிருந்தேன்‌; ஆனால்‌, என்‌ காமம்‌ என்னுள்‌ மறைந்திருத்தலைக்‌ கடந்து மன்றத்தில்‌ வெளிப்படுகின்றது.


Parimelalagar

இதுவும் அது. யான் நிறையுடையேன் என்பேன் - இன்றினூங்கெல்லாம் யான் என்னை நிறையுடையேன் என்று கருதியிருந்தேன்; என் காமம் மறை இறந்து மன்றுபடும் - இன்று என் காமம் மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வௌ¢ப்படா நின்றது.
விளக்கம்:
(மன்னும் ஓவும் மேலவற்றின்கண் வந்தன. மன்று படுதல் - பலரும் அறிதல். 'இனித் தன் வரைத்து அன்று' என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) யானே நிறையுடையே னென்றிருப்பன் , இப்படி யிருக்கவும், என் காமமானது மறைத்தலைக் கடந்து மன்றின்கண் வெளிப்படாநின்றது, (எ-று). இது தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறையுடையார் இவ் வாறு செய்யாரென்ற தோழிக்கு அவள் கூறியது.