குறள் 1253

நிறையழிதல்

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும்

maraippaenman kaamaththai yaano kurippinrith
thummalpol thonri vidum


Shuddhananda Bharati

Reserve lost

How to hide this lust which shows
Itself while I sneeze unawares!


GU Pope

Reserve Overcome

I would my love conceal, but like a sneeze
It shows itself, and gives no warning sign.

I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze.


Mu. Varadarajan

யான்‌ காமத்தை என்னுள்‌ மறைக்க முயல்வேன்‌; ஆனால்‌ அதுவே என்‌ குறிப்பின்படி நிற்காமல்‌ தும்மல்போல்‌ தானே வெளிப்பட்டு விடுகின்றது.


Parimelalagar

'மகளிர் காமம் மறைக்கப்படும்,' என்றாட்குச் சொல்லியது. காமத்தை யான் மறைப்பேன் - இக்காமத்தை யான் என்னுள்ளே மறைக்கக் கருதுவேன்; குறிப்பு இன்றித் தும்மல் போல் தோன்றிவிடும் - அதனாலென், இஃது என் கருத்தின் வாராது தும்மல்போல வௌ¢ப்பட்டே விடா நின்றது.
விளக்கம்:
('மன்' ஒழியிசைக்கண் வந்தது. ஓகாரம் - இரங்கற்கண் வந்தது. தும்மல் அடங்காதாற்போல அடங்குகின்றதில்லை" என்பதாம்.)


Manakkudavar

(இதன் பொருள்) காமத்தை யான் அடக்கக்கருதுவேன்; அவ்வாறு செய்யவும், அது தும்மல் தோன்றுமாறு போல், என் குறிப்பின்றியும் தோன்றா நின்றது,
(என்றவாறு). இது தலைமகள் நிறையழிந்து கூறிய சொற்கேட்டு இவ்வாறு செய்யாது இதனை மறைத்தல் வேண்டுமென்ற தோழிக்கு அவள் கூறியது.